காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம்.என்னதான் காவலன் வெற்றிதான் என்றாலும் பல்வேறு காரணங்களால் மெகா ஹிட்ஆகவில்லை.தொடர் தோல்வியின் பின் காவலன் வெற்றி பெற்றது ,தேர்தல் முடிவுகள் என்பன விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதுஅந்த மலர்ச்சியுடன் மீண்டும் ஒரு மெஹா ஹிட் கொடுப்பதற்காக விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம்தான் வேலாயுதம்.தெலுங்கு படமான ஆஸாத் படத்தின் ரீமேக் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் ஜெயம் ராஜா முதல் தடவையாக சொந்தக்கதையில் எடுப்பதாக சொல்லியுள்ளார்.படத்தின் ஒரு வரிக்கதை என்னவெனில் தந்தைக்காக (குருவி),தாய்க்காக(சிவகாசி),அண்ணனுக்காக(பத்ரி), தம்பிக்காக(பகவதி), தங்கைகாக(திருப்பாச்சி),நண்பனுக்காக(ப்ரண்ட்ஸ்), போராடிய விஜய் இதில் மக்களுக்காக போராடுகிறார்.(சுறாவிலும் அதைத்தானே செய்தார் #அப்படியா). .சுறா,வேட்டைகாரன்,குருவி வரிசையில் இது அமையும் என்பது பலரது எதிபார்ப்பு(வேட்டைக்காரன் அயன் வசூலை முறியடித்ததாக சன் பிக்சர்ஸ் சொல்லியது.குருவி 150வது நாள் வெற்றி விழா நடை பெற்றது).ஆனால் சிறப்பான திரைக்கதை நகர்த்தும் விதம் ,வலிமையான செண்டிமெண்ட்ஆக்ஷ்ன் ,காமெடிஎன பக்கா கொமெர்சியலாக கொடுத்தால் கில்லி,போக்கிரி வரிசையில் இணையவும் வாய்ப்புள்ளது. இசையை பொறுத்தவரை வேட்டைக்காரன் பட்டயைக் கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்ஜெனிலியா,ஹன்சிகா என இரு நாயகிகள். சச்சினில் ஜெனிலியா ஏற்கனவே நடித்தவர்.ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகியன தோல்வி அடைந்த நிலையில் இதை நம்பியுள்ளார்.விஜய் ஆண்டனியின் இசையில் எதிர்வரும் ஜுலை 5 பாடல்கள் வெளிவர இருக்கின்றன.மெலோடி, குத்துப்பாட்டு என்று விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்..சந்தானம் காமெடிக்கு உள்ளார்.எனினும் இதில் அவரிடம் அவரின் சமீபத்தைய படங்களைப் போல நிறைய எதிர்பார்க்க முடியாது .
Directed by jeyam raja Produced by Venu Ravichandran Written by M. Raja Starring
- Vijay as Vetrivel
- Shriya as Vaidehi
- Genelia D'Souza as Deepa
- Saranya Mohan as Vetrivel's sister
Music by vijay antony Cinematography Priyan Editing by Mohan Studio Aascar Films Release date(s) august 2011 Country global Language Tamil
.படத்தின் பலம்
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்)
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.) பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
3 comments:
இந்த பதிவை பார்த்து ஊக்கமளித்து தொடர்ந்து என்னை எழுத வைக்கும் அனைவருக்கும் நன்றி
kabiraj u continue your work. all the for your future work
THANK U GROUPON CLONE
Post a Comment