மங்காத்தா அஜித் நடிக்கும் 50 வது படம் .கடந்த மேதினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது .2007 இறுதியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா படத்துக்கு பின்னர் மங்காத்தா அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது. சக நண்பரான விஜய் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகையில் இவரின் படங்கள் வருடத்துக்கு ஒன்று வெளியாவதே அபூர்வமாக உள்ளது. கொலிவூட்டின்முன்னணி நடிகரான அஜித் இவ்வாறு தாமதிப்பது அவரின் ரசிகர்களை விரக்தி அடைய செய்கிறது.அதுவும் எத்தனை நாளுக்குத்தான் படங்களில் தல தல என்று கூவப் போகிறார்களோ தெரியவில்லை . தாமதித்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்க போனால் படம் சப்பையாகவே உள்ளது .படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் துளி கவலை கூட இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் விஜயைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அஜித் நடிப்பதாக இருந்து பின்பு கைவிட்ட படங்களில் நடித்தே ஒருவர் முன்னணி நடிகராகிய வரலாறு உண்டு .எது எவ்வாறாயினும் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய அஜித்தின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சில படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்தின் படங்கள் வெற்றி பெறும் வீதமானது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது துரதிர்ஷ்டம் ஆகும்.
மங்காத்தா
விஜயின் படமான சுறாவும்அஜித்தின் படமான மங்காத்தாவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்தாலும் விஜயின் சுறா வெளிவந்து (அது மொக்கையாகியது வேறு கதை) அடுத்தடுத்த படங்களும் வெளியாகி விட்டன .மங்காத்தா தாமதமாக வந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது .கிளௌட் நைன்மூவிஸ் சார்பில் துறை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ,பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. யுவனின் இசையில் விளையாடு மங்காத்தா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
.படத்தின் கதை சஸ்பென்ட் ஆக வைக்கப்பட்டிருந்தாலும் மேட்ச் பிக்சிங் (match fixing) தொடர்பானது என தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் அஜித் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. வில்லன் என்றால் முதலில் வில்லனாக நடித்து விட்டு க்ளைமாக்சில் நல்லவனாக காட்டும் வேடமும் (போக்கிரி) இல்லையாம்.எனினும் நெகடிவ் ரோல் இல் அஜித் நடிக்கிறார் என்பதுதான் இப்போது உறுதி ஆகியிருக்கிறது .( போலீஸ் ஆக நடிக்க அர்ஜுன் இருக்காரே). இப்படம் இந்தியில் இம்ரான் நடித்த ஜன்நெட் என்ற படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் வெங்கட் பிரபு அதை மறுத்துள்ளார் .
இப்போதைய தகவல்களின்படி எதிர்வரும் ஆகஸ்ட் 12 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .வேலாயுதம் ஏழாம் அறிவு என்பனவும் இதே காலப்பகுதியில் வெளியாக உள்ளன. எனினும் ஒரே நாளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை. .மங்காத்தா வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் தல .
No comments:
Post a Comment