Wednesday, August 3, 2011

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வருடம் ரஜினி,கமல் படங்கள் எதுவும் வெளியாகாது என்பது உறுதியான நிலையில் விஜய் அஜித் விக்ரம் சூர்யா படங்கள் முக்கிய எதிர்பார்ப்புக்குள்ளகின .இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம்  அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.படம் வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப் பட்ட திகதி ஒழுங்குதான் .மங்காத்தா அஜித்தின் பிறந்த நாளான மே 1 உம வேலாயுதம் ஜூன்22  உம ஏழாம் அறிவு பின்னும் என அறிவிக்கப் பட்டிருந்தன .

ஆனால் அங்கும் இங்குமாய் இழுபட்டு ஆகஸ்ட் வந்த  நிலையிலும் இன்னும் வெளியிடும் திகதி அறிவிக்கப் படாமல் உள்ளன .படங்களில் வெற்றி யாருக்கு கிட்டும் என்பதை அலச வேண்டும் என நானும் எண்ணி இருந்தேன் . ஆனால் படங்கள் இப்போதைக்கு வர மறுப்பதாலும் இந்த மாதம் மூன்று படங்களின் பாடல்களும் வெளிவர இருப்பதாலும் எந்த பட பாடல்கள் பட்டையை கிளப்பும் என அலசுவதே இந்த பதிவு .விக்ரமின் தெய்வ திருமகள். ஏலவே வெளி வந்து எல்லா உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளது .
மங்காத்தா  -யுவன் 



யுவன் ஷங்கர் ராஜா வின் இசையில் ஒரு பாடல் விளையாடு மங்காத்தா ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போடுகிறது .யுவனின் இசையில் தீனா,பில்லா ,ஏகன் என மூன்று படங்களில் தல நடித்துள்ளார் .இதில் பில்லா,தீனா என்பன அஜித்தின் டாப் ஐந்து படங்களுக்குள் உள்ளடக்கம் .ஐந்து என்ன மூன்று என்றே சொல்லலாம்.தீனா, பில்லாவின் வெற்றிக்கு இசை மிக முக்கிய பங்கு வகித்ததை சொல்லித்த்தான்  தெரிய வேண்டும் என்பது இல்லை .அதிலும் பில்லாவின் தீம் இசை ஆகட்டும் பின்னணி இசை ஆகட்டும் எல்லாம் உயர்தரம் .ஏகன் திரைக் கதையில் சொதப்பி படு தோல்வி அடைந்ததால் இசையை யாரும் கண்டுக்கவே இல்லை.

அனால் இது உங்காத்தா எங்காத்தா இல்ல மங்காத்தா தல யின் 50 வது படம் நடிப்பதே ரெண்டு வருசத்துக்கு ஒன்று அதிலும் 50வது படம் வேற சும்மா பிரிச்சு மேய வேண்டாமா இசையில். அதனால்தான் வட்டியும் முதலுமாய் ஏழு பாடல்களை கம்போஸ் பண்ணியிருக்கிறார் .அதிலே விளையாடு மங்காத்தாவின் ரீமிக்ஸ் வடிவிலும் ஒன்று உள்ளடக்கம் .சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலின் முதல் வரிகளை மட்டும் பயன்படுத்தி வித்தியாசமான இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் யுவன் .கடந்த ஆண்டு VTV தந்த  இசைப் புயலின் அலையையும்  எதிர் கொண்டு  பையா பாடல்கள் மிகப் ரு வெற்றி பெற்றன.அடடா மழைடா கடந்த வருடத்தின் சிறந்த பாடலாக தமிழ் நாட்டின் ஒஸ்கார் விருதான  விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது .அதையும் விஞ்சும் வகையில்  மங்காத்தா அமையும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர் பார்ப்பு .பொறுத்திருந்து பார்ப்போம் .இசை வெளியீடு ஆகஸ்ட் 10 என்பது கூடுதல்  தகவல் .

ஏழாம் அறிவு -ஹரிஸ் 


ஏழாம் அறிவு சொல்லவே தேவை இல்லை . நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் வலையுலகில் நிச்சயம் சொல்லுவேன் இம்  மூன்று படங்களில் அதிகம் எதிர் பார்க்கப் படும் படம் இதுதான் .இந்திய அளவில் முன்னணி வகிக்கும் முருகதாஸ் கோலிவுட் இல்  இப்போது முன்னணி( யாம் )வகிக்கும் சூர்யா .இசையில் முன்னணி வகிக்கும் ஹரிஸ் (A.R எங்கப்பா வருசத்துக்கு ஒன்னு தருவதே சந்தேகமாய் இருக்கு ).இணைவது காரணமல்ல .படத்தின் முக்கிய எதிர் பார்ப்பே கதை தான் .கதை கி.மு.கதை என்கிறாங்க ,தசாவதாரம் மாதிரி பல வேஷம் என்கிறாங்க, ஏழாவது அறிவு என்கிறாங்க சும்மா கிளப்புறாங்கையா பீதியை .சரி நாம விசயத்துக்கு வருவோம் .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இருக்காரே சூர்யா அவரு இந்த முன்னணிக்கு வந்ததுக்கு யாரு யாரு காரணம் .அனைத்து விரல்களும் கட்டாயம் நீட்டப் பட வேண்டிய கட்டாய  நபர் நம்ம ஹீரோ ஹரிஸ் .பின்ன என்னப்பா 2003 இல் காக்க காக்க தொடங்கி 2005 -கஜினி 2008 -வாரணம் ஆயிரம் எல்லாவற்றுக்கும்மேலாய் 2009இல் அயன் ,ஆதவன் என ரெட்டை பிரசவம் .இதில  எந்த படம் ஐயா  தோற்று இருக்கு (ஆதவன் -NO COMMENTS ) .இந்த படங்கள் அனைத்துமே இசைக்கு ஏதாவது ஒரு விருதை பெற்றுக் கொடுக்க தவறவில்லை .
.

சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய பிலிம் பாயர் ,சர்வதேச தமிழ் திரைவிருது காக்க காக்க தொடங்கி ஒவ்வொரு இந்த படங்களின் மூலம் விருதுகளை குவித்தார் .அதிலும் அயன்,ஆதவன் என தன்னுடைய படங்களே போட்டி போடும் அளவுக்கு புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன் .அத்தோடு விட்டாரா கோ,எங்கேயும் காதல் என இந்த வருசமும் பின்னி எடுத்து விட்டார் இதை விட அடுத்து இவருக்கு பெரிய மைல் கல் கூட(?) ரெடி ஆகிட்டு இருக்கு . எண்டாலும் எனக்கு ஒரு சந்தேகம் எனக்கென்னமோ சூர்யா படத்துக்கு இசை அமைத்ததால் தான்  ஹரிஸ் பாடல் ஹிட் ஆகியது போல் தோணுது .உங்களுக்கு ?. சோனி நிறுவனம் வேலாயுதம் பாடல்களை இந்த மாதமே வெளியிட வேண்டி இருப்பதால் ஏழாம் அறிவு பாடல் வெளியீடு தள்ளி போகலாம் எண்டும் கதைக்கினம்.? 
அப்புறம் இடம் போதாமையால் வேலாயுதம் பாடல் அலசல் அடுத்த பதிவில் விரைவில்
 காக்க காக்க 


 ONLY FOR  தளபதி ரசிகன் 


என்னடா தளபதியை பற்றி ஒன்னையும் காணலை எண்டு யோசிக்கிறீர்களா .
பதிவை திருப்பி வாசித்து விட்டு இதை படிங்க .
அஜித் பிறந்த நாள் மே 1 எண்டு போட்டிருக்கு ஜூன் 22 போடலை ஏன் -உலகுக்கே தெரியுமே .
அஜித்-யுவன் ரெண்டு படம் வென்று விட்டால் எல்லாம் வென்று விடுமா -ஏகன்...
விஜய் அவார்ட்ஸ் ஐ ஒஸ்காருக்கு  ஒப்பிட்டிருக்கேனே ஏன் என்று யோசித்தீர்களா அவங்கட பெயரே நம்மை  இம்பிரஸ் பண்ணுது .
அப்புறம் தளபதி க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது யாரு 
வேட்டைக்  காரனுக்கு 2009 இல் படம் மெஹா  ஹிட் ஆகலைனா கூட (சூப்பர் ஹிட் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் .)கூட தளபதி இல்லாட்டில் விழா களை கட்டாது எண்டு தெரிந்த படியால் தானே அபிமான நடிகர் விருது கொடுத்தாங்க. 
2010 இல கூட படம் எனக்கே பிடிக்கல தவிர வேற படமும் வரல .தலைவருக்கு கூட நிலைமை சரியில்ல இந்த நேரம் நாம விருது வாங்க கூடாது ஆகவே இந்த முறை அந்த விருதை நண்பன் சூர்யாவுக்கு கொடுங்க என்று தளபதி வற்புறுத்தி சொன்ன படியால் தானே விருது கிடைக்கல.
நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் -தெரியும்தானே நிஜவுலகில் யாருக்கு ரசிகர் கூட என்று 
 .பேரழகனில என்ன மாதிரி குனிந்து வளைந்தாலும் நம்ம கில்லி முன்னாடி நிக்க முடிந்ததா .எத்தனை வேஷம் போட்டாலும் நிஜ முகத்தோடு மக்களுக்காய் போராடும் (வேலாயுதம் படத்தில்) தளபதி யை அசைக்கவே முடியாது .

அப்புறம் இப்போதைய லேட்டஸ்ட் மொக்கை என்ன தெரியுமா (நம்ம பதிவை விடுங்க ) சினிமா விகடன் கருத்து கணிப்பு முடிவு வெளி வந்திருக்காம் .எனக்கொரு பழமொழி ஞாபகம் வர வேணும் .பட் ஆனா வரலையே யாருக்காவது வந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ் .

அடுத்த பதிவை மிஸ் பண்ணி விடாதீங்க வெற்றி ஆயுதம்  வேலாயுதம் பாடல்கள் 

அணிலுக்கே அணிலாக உங்களில் ஒருவன் . 
தயவு செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டு போடுங்கள் .

Post Comment

45 comments:

Unknown said...

ஹிஹி கலக்கல் பதிவு!!!!
எல்லாம் வெற்றி பெறும் என்று தான் நான் நினைக்கிறேன்!!!

நிரூபன் said...

பொறுத்திருந்து பார்ப்போம் சகோ, எந்தப் படப் பாடல்கள் சக்கை போடு போடப் போகின்றது எனறு.

கவி அழகன் said...

கலக்கல் பதிவு!

kobiraj said...

நன்றிகள் தல சிவா.எது வெல்லும் எண்டு தெரியல .

kobiraj said...

நிருபன் அண்ணா,கவி அழகன் கருத்துக்கு நன்றிகள்

Unknown said...

ஏழாம் அறிவு பறிச் சொல்லத் தேவையில்லை! மெகா ஹிட்!!
வேலாயுதம் எப்படியும் ஓடும்!
மங்காத்தா வெற்றிகரமாக சொதப்பும்னு தோணுது!

Ragu said...

உங்கட லொல்லு தாங்கல கோபி
நிங்க பேசாம அரசியலுக்கு போயுடுங்க?????

kobiraj said...

மங்காத்தா பெரிய நட்சத்திர பட்டாளமே கிளம்பியிருக்கு . கட்டாயம் வெல்ல வேண்டி உள்ளது .வேலாயுதம் சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளது .ஏழாம் அறிவு முருகதாஸ் படம் .கருத்துக்கு நன்றி ஜி .

kobiraj said...

அடுத்த கிழமையும் தொடங்கா விட்டால் அப்பிடி செய்யத்தான் உத்தேசம் ரகு .உங்கள் கருத்துக்கும் நன்றி

maruthamooran said...

கட்டாயம் மூன்று படங்களையும் பார்ப்பேன். ஏழாம் அறிவும்- வேலாயுதமும் தியோட்டருக்குப் போவதாக உத்தேசம். ஆனாலும், அடிபிடிப்பட்டல்ல சில நாட்களின் பின்னர்.

மங்காத்தாவும் பார்க்க வேண்டும்.

இன்றுதான் முதலாவதாக வருகிறேன். வாழ்த்துக்கள்!

இந்திரா said...

நல்லதொரு அலசல்..
ஏழாம் அறிவு பார்க்கத் தூண்டுகிறது.

உங்கள் தளத்தில் followers list எங்கே?

kobiraj said...

@மருதமூரான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் .உங்கள் நட்பு தொடர வாழ்த்துகிறேன்

kobiraj said...

இந்திரா ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .அப்புறம் சிறிய கோளாறு செய்து விட்டது .இப்போது திருத்தி விட்டேன்

kobiraj said...

thanks samuthraa

N.H. Narasimma Prasad said...

பிரதர், என்ன நீங்க 'தளபதி' ரசிகரா? பாத்து பாஸ். 'விஜய் ரசிகர்'ன்னு சொன்னா வர்றவன், போறவன் எல்லாரும் கலாய்ப்பாங்க.

kobiraj said...

பிரதர் நாங்கள் வலைப் பதிவு ஆரம்பித்ததே அணிலுக்கு அணிலாக இருக்கத்தான்.காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கலாய்ப்பவர்கள் கலாய்க்கட்டும் .நாம தளபதி மாஸ் முன்னாடி இதெல்லாம் தூசு.எனக்கொரு கவலை என்னவென்றால் இப்போ கலாய்ப்பவர்கள் பலரும் புகழ தொடங்கி விட்டாங்க எமக்கு வேலை இருக்காது போல இருக்கு .அப்புறம் உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றிகள் தோழரே

Anonymous said...

நல்ல பார்வை, ஆனா எனக்கு தியேட்டர் சென்று படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை ))

kobiraj said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் .கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் இவை சார்

kobiraj said...

யாராவது இன்லியில் ஓட்டு போடுங்களேன். ஒரு பதிவை பிரபலமாக்க நாம படுற பாடு இருக்கே சொல்லி மாளாது

கார்த்தி said...

/* நடிப்பதே ரெண்டு வருசத்துக்கு ஒன்று அதிலும் 50வது படம் */
சார் அப்பிடின்னா அசித்துக்கு நுர்று வயது வநதிடுச்சா சார்? ஹிஹிஹி
நல்ல அலசல்கள் தொடருங்கள்

கார்த்தி said...

என்னை பொறுத்தவரை 7ம் அறிவுதான் பாடலிலும் படத்திலும் முதலிடம் பெறுமென நினைக்கிறன். நான் சூர்யா ரசிகனுங்கோ!!

கார்த்தி said...

சார் ஓட்டும் போட்டிருக்கு சார்! ஹிஹிஹி

kobiraj said...

உங்க குசும்புக்கு அளவே இல்ல கார்த்தி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா விட மாட்டீங்க போல .சரி paarppom உங்கள் ஆசை நிறைவேறுமா என்று

kobiraj said...

அப்புறம் ஓட்டு போட்டதற்கும் நன்றி

K.s.s.Rajh said...

அப்பறம் நண்பரே தலையின் மங்காத்தாவில் அர்ஜுன் நடிக்கின்றார்தானே அதைவிட தளபதி அர்ஜுன்,மற்றும்,தலையுடன் சேர்ந்து வெங்கட்பிரபு வேண்டுதலுக்கு இனங்க தலையின் நட்புக்காக மங்காத்தாவில் தளபதி ஒரு பாடல் காட்சியில் தோன்றியுள்ளதாகவும் ஒரு தகவல் வந்தது இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,விஜய்,அஜித்,ரசிகர்கள் மத்தியில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்(ஏற்கனவே ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் விஜய்யும்,அஜித்தும் சேர்ந்து நடித்துள்ளார்கள்)
தலை,தளபதியுடன் ஓப்பிடும் அளவுக்கு சூர்யா இன்னமும் நிறைய நடிக்கவேண்டும் என்பது என்கருத்து,ஏன் என்றால் தளபதியின் காதலுக்கு மரியாதை,துள்ளாதமனமும் துள்ளும்,பூவே உனக்காக,தலையின் அமர்க்களம்,காதல் கோட்டை,இந்தப்படங்களுக்கு நிகராக சூர்யாவின் படங்கள் இன்னும் வரவில்லை.ஆனால் சூர்யாவின் நந்தா,மெளனம் பேசியதே இந்தப்படங்கள் பரவாஇல்லை

"ராஜா" said...

// தமிழ் நாட்டின் ஒஸ்கார் விருதான விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது


ங்னா.. ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்ங்னா..

//வேட்டைக் காரனுக்கு 2009 இல் படம் மெஹா ஹிட் ஆகலைனா கூட (சூப்பர் ஹிட் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் .)

உங்களுக்கு காமெடியும் நல்லா வருதுண்ணா ....


// தளபதி இல்லாட்டில் விழா களை கட்டாது

அப்படியா? சொல்லவே இல்ல...

M.R said...

கலக்கலான ஒரு பதிவு நண்பரே

sweet said...

1000 mukkunaalum ajith-o vijay-o kakka kakka surya performance-la 1 % kuda panna mudiyadhu

i am not a surya fan...

i am a true cinema lover

கேரளாக்காரன் said...

Vijay real actor
surya real life actor
ajit real hero

kobiraj said...

ராஜ் உங்கள் வருகை கருத்துக்கு நன்றி.அப்புறம் தல தளபதி இணைந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் .தமிழ் சினிமாவில் இவ்வளவு காலமாய் உயர் நிலையில் நிற்கும் இருவரும் ரியல் ஹீரோ தான் .

kobiraj said...

ங்னா.ராஜா வணக்கம் ங்கண்ணா .''ங்னா.. ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்ங்னா..''நன்றிங்கண்ணா உங்க பாராட்டுக்கு ////''வேட்டைக் காரனுக்கு 2009 இல் படம் மெஹா ஹிட் ஆகலைனா கூட (சூப்பர் ஹிட் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் .)

உங்களுக்கு காமெடியும் நல்லா வருதுண்ணா .... ''அப்ப பாருங்களேன் . .// தளபதி இல்லாட்டில் விழா களை கட்டாது

அப்படியா? சொல்லவே இல்ல...// நீங்க கேக்கவே இல்ல

kobiraj said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் M.R

kobiraj said...

@SWEET //1000 mukkunaalum ajith-o vijay-o kakka kakka surya performance-la 1 % kuda panna mudiyadhu

i am not a surya fan...//

சூர்யா ரசிகர் கூட இந்த கொமேடிக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க .அப்புறம நீங்க பின்பா படம் பார்க்க தொடங்கினீங்க

kobiraj said...
This comment has been removed by the author.
kobiraj said...

@SWEET //1000 mukkunaalum ajith-o vijay-o kakka kakka surya performance-la 1 % kuda panna mudiyadhu

i am not a surya fan...//

சூர்யா ரசிகர் கூட இந்த கொமேடிக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க .அப்புறம நீங்க 2010 பின்பா படம் பார்க்க தொடங்கினீங்க

kobiraj said...

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )./YOU ARE COREECT GOOD UNDERSTANDING .THANKS FOR UR VISIT @ COMMENT

Unknown said...

மாப்ள அழகா சொல்லி இருக்கீங்க....என்ன இருந்தாலும் ஆஸ்கர் அவர்ட் மேட்டர் தான் கொஞ்சம் ஒவரோன்னு தோனுதுய்யா!

sweet said...

poda loosu

eludha theriyaadhavan blog eludhina ippadi thaan irukkum

kaala kodumai

Tamil Stories Blogspot said...

"வெற்றி ஆயுதம் வேலாயுதம் பாடல்கள் "
அடுத்த பதிவிற்காக காத்திருப்பேன்
http://tamilpadaipugal.blogspot.com

kobiraj said...

sweet ரொம்ப கடுப்பு ஆயிட்டிங்களா blog எப்பிடி இருக்கும் எனக்கு புரியல.அப்புறம் உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்களா சொல்லவே இல்ல .உங்கள் விமர்சனங்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றது .ஒவ்வொரு பதிவுக்கும் வாருங்கள் .

kobiraj said...

Tamil Stories Blogspot உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு விருந்து நன்றிகள் .அடுத்த பதிவு விரைவில்

kobiraj said...

விக்கியுலகம் //மாப்ள அழகா சொல்லி இருக்கீங்க....என்ன இருந்தாலும் ஆஸ்கர் அவர்ட் மேட்டர் தான் கொஞ்சம் ஒவரோன்னு தோனுதுய்யா!//நன்றிகள் விக்கியுலகம் அப்புறம் சும்மா ஒரு பில்ட் up தான் .கண்டுக்காதீங்க

M.R said...

நண்பர் கொபிராஜிர்க்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

எல்லாம் வெற்றி பெற்று ரசிகர்கள் சந்தோசமடைந்தால் சரி தான் வாழ்த்துக்கள் நண்பா

M (Real Santhanam Fanz) said...

கலக்கல் பதிவு.. இதே மாதிரி ஒரு பதிவு நம்ம பிளாக்ல யும் இருக்கு... வந்து பாருங்களே...

ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல் உங்க ஓட்டும் கமெண்டும் அவசியம் பாஸ்...

Related Posts Plugin for WordPress, Blogger...