Saturday, August 27, 2011

சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ?

      .   1975  இல்     பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார் .படத்தில் இவருக்கு விஜய்க்கு இணையான வேடம் வழங்கப் பட்டிருந்தது .விஜய் ஜோடியாக கௌசல்யாவும் சூர்யா ஜோடியாக சிம்ரனும் நடித்தனர் .விஜயின் பாடல்களை விட சூர்யா நடித்த பாடல்களே பிரபல்யம் பெற்றன .'மனம் விரும்புதே உன்னை ' அந்த கால பெண்களை கொள்ளையிட்ட பாடல் .விஜய் அப்போது பூவே உனக்காக ,லவ் டுடே கொடுத்த ஹிட் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் .அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு தனக்கு சமனான வேடத்தை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் விட்டு கொடுக்க காரணம் என்ன .எந்த ஒரு நடிகனாவது அப்படி செய்வாரா ?.விஜய் அப்படி செய்ய  காரணம் என்ன.?.சூர்யா விஜயின் நண்பன் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது .(நேருக்கு நேர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் ).
        பின்னர் சூர்யா காதலே நிம்மதி,சந்திப்போமா,பெரியண்ணா,பூவெல்லாம் கேட்டுப் பார் ,உயிரிலே கலந்தது என ஐந்து படங்களில் நடித்தாலும் எதுவுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை .பெரியண்ணா கப்டனுடன் இணைந்து நடித்ததால் ஓரளவுக்கு சூர்யாவை இனங்காட்டியது .(விஜயின் தந்தை S.Aசந்திரசேகர் எடுத்த படம் இந்த பட வாய்ப்புக்கும் விஜய்தான் காரணம்)
    .                     மீண்டும் சித்திக் இயக்கத்தில் விஜயுடன் இணைந்தார்  பிரண்ட்ஸ் படத்தில்.படத்தில் விஜய்,சூர்யா இருவரும் உயிர் நண்பர்கள். அவர்களின் நட்பை சுற்றியே திரைக்கதை நகரும் .வடிவேலுவின் நகைச்சுவையும் கை கொடுக்க படம் சூப்பர் ஹிட் ஆனது .பிரண்ட்ஸ் வரும் போதும் விஜய் குஷி,பிரியமானவளே என தொடர் வெற்றியில் இருந்தார் .காதலுக்கு மரியாதை ,துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பிளாக் பஸ்ட்டர் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் இருந்தார்.ஆனால் சூர்யா சினிமாவில் இனம் காணப் படாமல் தோல்வியில் துவண்டு இருந்தார்.எனினும் மீண்டும் தனக்கு சமனான வேடத்தை அளித்து அவருக்கும் பாடல் காட்சிகளை வழங்கினார்  விஜய். சூர்யா,விஜய்  சேர்ந்து வரும் பாடல் காட்சிகளை பார்த்தால் தெரியும் .ஒரு காட்சியில் விஜய் முன்னிலைப் படுத்தப் பட்டால் அடுத்த காட்சியிலேயே சூர்யா முன்னிலை படுத்தப்படுவார் .அப்போதைய காலகட்டத்தில் விஜய் அப்பிடி நடித்திருக்க தேவை இல்லை.சூர்யாவை இரண்டாவது ஹீரோ ஆக காட்டி இருக்கலாம் .ஆனால் விஜய் அப்பிடி செய்ய வில்லை .ஏன் ?.சூர்யா அவரின் நண்பன்.ஆக மொத்தத்தில் விஜய் சூர்யாவை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல் முதல் வெற்றியையும் பெற்று கொடுத்தார் .
                பிரண்ட்ஸ்  இல் முதல் வெற்றியை பெற்ற சூர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .இனி தனக்கு ஏறுமுகம் தான் என்று .அடுத்து சூர்யா நடித்த நந்தா சூர்யாவின் கரியரையே புரட்டி போட்டது .சூர்யாவை  பாலா பட்டை தீட்டினார் .சூர்யா நடிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டார் .படங்களை தேர்ந்தெடுத்தார் .படத்திற்காக கடுமையாக உழைத்தார் .வெற்றிகளை குவிக்கிறார் .அதிர்ஷ்டமும் சூர்யாவுக்கு கை கொடுத்தது.நந்தா முதலில் அஜித் நடிப்பதாய் தான் இருந்தது .கஜினியும் மிரட்டல் எனும் பெயரில் அஜீத்துக்காக உருவான படம்தான் .     
      எது எப்படியோ சூர்யா  இன்று முன்னணி இடத்துக்கு வந்து விட்டார் .இன்றைய தேதியில் முன்னணி நடிகர் அவர்தான் .அவரின் அடுத்த படமான ஏழாம் அறிவுக்கு நிலவும் எதிர் பார்ப்பு ,அவரின் சமீப படங்களின்  தொடர் வெற்றிகள் என்பன அதற்கு சான்று .ஆனால் இப்போதைய விஷயம் என்னவென்றால் விஜய்,அஜித்,விக்ரமும் சூர்யாவின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர் .படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டனர்.நண்பன் வந்த பின் மீண்டும் முன்னணி யார் என்று எழுத வேண்டி வரலாம் .அதை விடுவோம் நான் சொல்ல வேண்டிய விடயம் இந்த நண்பன்தான்.

 .                           .                 3 இடியட்ஸ்ஐ தமிழில் ஷங்கர் ரீமேக் செய்வார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அனைவரிடமும் எழுந்த ஒரே கேள்வி அமீர்கான் பாத்திரத்தில் ஷங்கர் யாரை தெரிவு செய்வார் என்பதுதான் .ஷங்கர் தீர்க்கமாக விஜயை தெரிவு செய்தார் .விஜயின் நண்பர்களில் ஒருவராக சூர்யா நடித்திருக்கலாம் அது நட்பை சூர்யா வெளிக் காட்டுவதற்கு ஒரு  சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் .அதை இங்கு சொல்ல வரவில்லை .அப்போது சூர்யா வெற்றிக் கடலில் மிதந்து கொண்டிருந்தார் .விஜய் தோல்வியில் துவண்டு கொண்டிருந்தார்.விஜயை விட முன்னணியில் இருக்கும் போது அவரையும் விட முக்கியத்துவம் குறைந்த ரோலில் நடிப்பது சாத்தியம்   இல்லைதானே .  .ஆனால் அரசியல் காரணங்களுகாக விஜயை படத்தை விட்டு தூக்கியவுடன் அந்த இடத்துக்கு சூர்யாவை நடிக்க கேட்ட போது சூர்யா என்ன செய்தார்.இது தன்னுடைய நண்பனின் படம் அவனை நீக்கிய படத்தில் நான் நடிப்பது அவனை அவ மதிப்பது போன்றது என்பது சூர்யாவுக்கு தெரியாதா? எப்படி  ஒத்துக் கொள்ள     முடிந்தது இவரால் .பட வாய்ப்பு இன்றி தோல்வியில் துவண்டிருந்தாலும் பரவாயில்லை மன்னித்து விடலாம் .இந்த படத்தில்  நடித்துதான் தான் சூர்யா என்பதை நிருபிக்க வேண்டுமா?.அதற்குள் படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை வேறு.

           .    முடிவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.சூர்யா,விஜய் நட்பு பற்றி நான்  நினைப்பதைத்தான் எழுதி உள்ளேன் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் . இது  நண்பன் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய பதிவு .அப்போது நான் வலையுலகில் இல்லை என்பதால் இப்பொது எழுதியுள்ளேன் .
 பதிவு  பிடித்திருந்தால் ஓட்டு போடவும்







Post Comment

33 comments:

rajamelaiyur said...

Final bunch super . .

Unknown said...

விடுங்க பாஸ்...அவங்க அவங்க ட்ரெண்டு அவங்களுக்கே தெரியும் தானே!

uDanz said...

உங்கள் பதிவுகளை மேலும் பிரபலமடைய யுடான்ஸ் தமிழ் திரட்டியில் சேர்த்துஓட்டுப்பட்டையை இணையுங்கள். இது பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டி

http://udanz.com

Modi said...

ஹ்ம்ம்ம்ம்

ஓட்டுப்போட்டாச்சு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல கேள்விதான்....

விஜய் தற்ப்போது அரசியல் பாதையில் பயணிக்க துவங்கிவிட்டார்...

அவருடன் இணைந்து நடிக்க சூர்யா விரும்பாததது ஆச்சரியம்தான்...

நல்ல கதையாக இருந்தால் சூர்யா கண்டிப்பாக நடிப்பார் என நம்புகிறேன்..

Anonymous said...

nalla thaan rosanai solreenga. ithe visai nadikka nanthathe avuraale thaannu sollikittu avarukku pottiyaa padam release pannarathumavar pada styla copy adichcu than padathila vaichchu kittu build up kuduththu thaan then aduththa ssnnu kummi adichappa avan mandiayilla thattiyirukkruthu appu indha kaalm kali kaalam kaaliyila sencha maththiyaanam namakku athu thaan ithungo

kobiraj said...

நன்றிகள் ராஜா .வருகைக்கும் குத்துக்கும் நன்றி

kobiraj said...

@சிவா ஓகே பாஸ் .இருந்தாலும் இப்படி செய்யலாமா ? வாழ்க்கை ஒரு வட்டம் என்பது அவருக்கு தெரியாது போல .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

kobiraj said...

@ uDanz இணைத்திட்டால் போச்சு .

kobiraj said...

நன்றிகள் மோடி

kobiraj said...

''விஜய் தற்ப்போது அரசியல் பாதையில் பயணிக்க துவங்கிவிட்டார்...

அவருடன் இணைந்து நடிக்க சூர்யா விரும்பாததது ஆச்சரியம்தான்...

நல்ல கதையாக இருந்தால் சூர்யா கண்டிப்பாக நடிப்பார் என நம்புகிறேன்..'' நடித்தால் நல்லதுதான் .இப்போதைக்கு அரசியல் சரி வராது என்பது விஜய்க்கே நன்கு தெரியும்.அதுதான் முதலில் தன்னை பலப் படுத்துகிறார் .அப்புறம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர் அவர்களே .

kobiraj said...

இன்லியை யாருமே கண்டுக்கவே மாட்டேன் என்கிறீர்கள் .இன்று மட்டும் 1ooo தாண்டி வெற்றி நடை போடுகிறது.தமிழ்வெளி தமிழ் மணத்தில் சூடாக்கிய அனைவருக்கும் நன்றிகள்

ரைட்டர் நட்சத்திரா said...

present thanx

Anonymous said...

Boss chumma comedy pannaatheenga...Ovvoru padamum kashtap pattu nadikkira Surya enga, chumma naalu rasikar manrankala vachchu kondu, mokkai thanamaana padangal nadikkira vijay enga...At the beginning vijay is not in a status to decide abt other actors in his movie, he didn't hav the star image. (during Nerukku Ner, Friends period). Boss yozichchu ezuthunga...
And for the Shankar's latest movie, earlier Surya is booked for Ameer's character. Then only vijay came in. For a remake film like this, Vijay is enough no need for Surya.
Don't write such stupid articles, with any common sense...
Make this comment published in your wall, if u r a brave man...

மாய உலகம் said...

விஜய் சூர்யவால் அந்த படத்திலிருந்து நீக்கப்படவில்லை எனவே விஜய் ரிமூவ் ஆனா இடத்தில் சூர்யா வந்ததும் தவறு இல்லை... அங்கே எந்த வகையான் உட்பூசல் நடக்குது என யாருக்கு தெரியும் ... நண்பரே சூர்யா சமூக சேவையல்லாம் செஞ்ச்கிக்கிட்டுருக்கார்.. அது மட்டுமில்லாமல் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்... இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டதால் விஜய் ஒன்றும் துவண்டுவிட போவதில்லை வேறு படத்தில் வெற்றி வாகை சூடாத்தான் போகிறார்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

//நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.//

Really? I thought this article was intended to do exactly that.

Village வின்ஞானி said...

Thambi...naatula evvalavo pirachanaigal irukku... Atha vittutu intha topic romba mukkiyama???? Itha oru pathivu nu vera nee pottiruka!!!!!

Velangidum

kobiraj said...

@ மாயஉலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kobiraj said...

@ village விஞ்ஞானி அவர்களே உங்களுக்கு வேற பிரச்சினை இருந்தால் பார்க்க வேண்டியதுதானே இதை ஒரு பதிவு ஏன்னு நினச்சு அதுக்கு ஒரு கம்மெண்டு கூட போடுறீங்களே போங்க சார் போயி புள்ள குட்டிய படிக்க வையுங்க .

kobiraj said...

annonymous களின் கருத்துக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை .தம்மை யாரென்று வெளிப்படுத்த தைரியம் இல்லாத வனுக்கெல்லாம் ஏன் இந்த பிழைப்பு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Oh sorry boss, Neenga Vijay fan? Sorry, naan comment pannirukkavae koodathu...Ungala naan yozikka sonnathae thapputh thaan..Sorry again.

kobiraj said...

i am proud of being vijay fan.அப்பதானே கண்ட கண்ட நாயுங்க கூட என் blog பக்கம் வருகுது .anyhow thanku mr.annonymous for ur comments

guru said...

vidunga boss its thalapathy time now... vijay's acting with all the leading directors... soriya ellam oru allunu thalapathyku equalla paesitu irukeenga... avan kunam thaan theriyume...

varun said...

velayutham cd vanguyacha... songs r rocking bro... nice article...

kobiraj said...

நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும் குரு,வருண் இலங்கையில் இன்னும் வரவில்லை நண்பரே

அம்பாளடியாள் said...

ஒருவரை ஒருவர் பார்த்துத் தன்னைத்தானே உயர்த்திக்கொள்வதுதானே
உலகத்தின் நியதி .இதில் இந்த இருவரும் நண்பர்கள் .கூட்டாளியோட
சகல செயலும் கவர்சியாகத் தெரிவதால் அந்தப்பாணியில் முன்னேற நினைத்திருக்கலாம் சகோ .விட்டுத் தள்ளுங்கள் அருமையான பகிர்வுக்கு .தமிழ்மணம் 6 போட்டாச்சு .நன்றி பகிர்வுக்கு .எங்கள் பக்கமும் வாருங்கள் சகோ .

kobiraj said...

நன்றிகள் வரவுக்கும் வாக்குக்கும் கருத்துக்கும்

kobiraj said...

கண்டிப்பாக வருகிறேன் அம்பாள் அடியாள்

Anonymous said...

//நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை //

Now you want a free thorn-less path. You expect nobody to question you.
You wont answer a "nobody" even if what he asks make sense.

Dont worry. I am a valipokkan only. I wont be around so often. So enjoy.
But my question remains. This blog was to criticize Surya. Yes or No?

No, I am neither a fan of Surya or Vijay. I will hate myself calling as somebody's fan. At least I wont accept myself doing so. Yes, I dont have problem you calling yourself as a vijay's fan. That is entirely your problem.

My question remains. This blog was to criticize Surya. Yes or No?
Answer yourself. Nallavana nadikkathe.

எழிலருவி said...

நேரடியாக மறுக்க முடியாமல் தான் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளோ??

Anonymous said...

The biggest disgrace for Thalapathy, is the fans like you. Vijay himself has a own style and career. He may face some failures , and it's usual in a movie industry. He's don't need anyone to hold him up, as he has his own wings.
There is a great friendship circle prevails in tamil cinema industry and all the actors (including vijay) in it.
Why do you guys compare one actor with other. Even Vijay won't like to read such an article. Please change your mentality ; don't post unnecessary posts which can cause disputes.
Thank you.

தல தளபதி Mr. நல்லதம்பி said...

தம்பி ரொம்ப விசனப்படாத.
உங்காளு ரப்சர் தாங்காம சூர்யாகிட்ட ஷங்கர் போனப்போ 8 கோடி குடு, வெளிநாட்டு ரைட்ஸ் குடுன்னு ஓவரா டார்ச்சர் குடுத்து இவனுக்கு அவன் தேவலன்னு திரும்பவும் ஷங்கர விஜய்கிட்ட தள்ளிவுட்டாரே? இதவிட வேறென்ன உதவி சூர்யா செஞ்சிருக்க முடியும்?

Related Posts Plugin for WordPress, Blogger...