Tuesday, September 13, 2011

கப்டன் சில அரிய தகவல்கள்


தமிழ்  நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு  அரசியலில் கொடி கட்டிப் பறந்த  பலரும் திரைப்பட துறை சார்ந்தவர்கள் தான்.M.G.R,கலைஞர்,ஜெயலலிதா என அந்த  வரிசை நீளமானது .அதற்காக சினிமாவில் சிறந்து விளங்கியவர்கள் எல்லாம் அரசியலில் பிரகாசித்தார்கள் என்று சொல்ல முடியாது .இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நல்ல உதாரணம் தேர்தலில் ஒருமுறை போட்டி இட்டும் தோல்வி அடைந்ததால் அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை ..அந்த காலத்தில் மக்களிடையே படிப்பறிவு குறைவு திரைப்படங்களில் நல்லவராக ,அனைவருக்கும் உதவி செய்பவராக நடித்தால் அவர் உண்மையிலேயே அப்படியானவர் என்ற முடிவுக்கு வருவார்கள் அதுவே வெற்றிக்கு காரணம் என்று ஒரு சாரார் சொல்லுவதையும் கேட்டுள்ளேன் .ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை மக்களிடையே அறிவு பெருகி விட்டது .நன்கு சிந்தித்தே தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் .நடிகர்கள் பலரும் அரசியலில் காலடி எடுத்து வைக்க ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கிறார்கள் .சிலர் இந்தா வருகிறேன் அந்தா வருகிறேன் என பதினைந்து வருடங்களாகவும் ,இன்னும் சிலர் சரியான வாய்ப்பை எதிர் பார்ப்பு இருப்பதாகவும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .

இவர்களுக்கு மத்தியில் எந்த ஒருவரின் உதவியும் இல்லாமல் தனிமரமாக நின்று கட்சி ஆரம்பித்து அதை வளர்த்து 7 வருடங்களுக்கு இடையில் தமிழ் நாட்டின் எதிர்  கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்த்  அவர்களை பற்றியதுதான் இந்த பதிவு .
விஜயகாந்த் எனும் பெயர் எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் (1995-1999)எனது சுற்றத்து ஆண்களால் அதிகமாக உச்சரிக்கப் படும் பெயர் ,அப்போது ஒரு வீட்டில் படம் போடுவதென்றால் குறைந்தது 50 பேராவது பார்ப்பார்கள் .அனேகமாக கல்யாணவீடு,சாமத்திய வீடு (பூப்புனித நீராட்டு விழா )நடைபெறும் போது இரவு  வேளையில் படம் போடுவார்கள்  .என்ன படம் போடுவது என்று பெரிய பிரச்சினையே எழும் .அப்போது ஆண்கள் அநேகரின் தெரிவாக இருப்பது விஜயகாந்த் படங்கள் தான் .அவரின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு அவர்கள் அடிமை .  தொடர்ந்து   ஓடும் நாலைந்து படங்களில் குறைந்தது ஒன்றாவது விஜயகாந்த் படம் இருக்கும் .
ஆனால் எனது பள்ளி காலத்தில் அவரின் வல்லரசு,வாஞ்சிநாதன்  ,நரசிம்மா,ரமணா  என தொடர் ஹிட் கொடுத்து என்னை கவர்ந்தார் .எனினும் கடந்த சில வருடங்களாக எனது நண்பர் வட்டத்தில் அதிகம் கேலி செய்யப் படுபவராக மாறினார் .எனது நண்பர்களில்  பலருக்கும் விஜயை பிடிக்காது .அப்பிடி பிடித்தவர்களுக்கும் விஜயகாந்தை பிடிக்காது .எனினும் எனக்கு அவரின் துணிச்சல் ,தைரியம் பிடித்து இருந்தது .அந்த வகையில் புரட்சிகலைஞர் ,கப்டன் ,கருப்பு M.G.R என அழைக்கப் படும் விஜயகாந்த் பற்றிய சில குறிப்புக்கள் தான் இவை .

விஜய காந்தின் நிஜப் பெயர் நாராயணன்   . (பிறப்பு -1952-08-25 ,மதுரை  )அது தாத்தாவின் பெயர் என்பதால் விஜயராஜ் அழகர்சாமி நாயுடு என வீட்டில் அழைக்கிறார்கள் சினிமாவுக்கு வந்த பின்னர் டைரக்டர் M.A.காஜா வைத்த பெயர் விஜயகாந்த் அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த் தான்.

ஐயப்பன் கோவிலுக்கு 18ஆண்டுகளுக்கு மேலாக சென்று வந்தவர் .நடுவே பக்தர்கள் இவரின் காலில் விழுந்து வணங்குவதை பழக்கமாக கொண்ட பின் இப்போது கோவிலுக்கு செல்வது இல்லை .தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 இல் மதுரை சூரன் முதல் ஜனவரி 4படம் வரை 18படங்களும் 1985ஆம் ஆண்டில் மட்டும் அலை ஓசையில் ஆரம்பித்து நானே ராஜா நானே மந்திரி வரை 17படங்களிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார் .இந்த சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது .அதே போல் வேறு எந்த நடிகரின் 100வது படமும் கேப்டன் பிரபாகரனை போல் செம  ஹிட் ஆனதில்லையாம் (கவனிக்க 50வது படம் இல்லை  )

விஜயகாந்த்  வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் இனிக்கும் இளமை .அதற்கு பிறகு எல்லாம் ஹீரோ தான் . 

பாரதிராஜா  தவிர்ந்து பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்தது இல்லை விஜயகாந்த் .(ரமணா எடுத்த போது முருகதாஸ் பெரிய டைரக்டர் இல்லை _)
இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 17படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் 17 படங்களிலும் நடித்துள்ளார்.இவருடன் அதிக படங்களில் நடித்த நடிகை நளினி .

இதுவரை  நடித்த  மொத்த  படங்கள்  153.இவர்  இயக்கிய  ஒரே  ஒரு  படம்  விருத்தகிரி    

எல்லா தம்பி தங்கைகளுக்கும் திருமணம் செய்து  கடமையை முடித்த போது வயது ஆகி விட்டது .அதற்கு பின்தான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவை கைப்பிடித்தார். விஜய பிரபாகரன்,சண்முக பாண்டியன் என இரண்டு மகன்மார்.  


வீட்டில் செல்லமாக ரொக்கி,சீசெர் ,தேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார்.

செயின் ஸ்மோகர் ஆக இருந்த விஜயகாந்த் திருமணத்தின் பின் அந்த பழக்கத்தை அறவே விட்டு விட்டார்.அசைவப் பிரியரான அவர் இப்போது மீன் சாப்பிடுவதோடு  நிறுத்திக் கொள்கிறார் 

கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்தை விஜி எனவும் நெருங்கிய நண்பர்கள் பாஸ் எனவும் கட்சி வட்டாரத்தில் கப்டன் எனவும் அழைக்கிறார்கள்

.
நடிகர் ராஜேசின் தம்பியின் திருமணத்தின் போதுதான்M.G.R ஓடு கை குலுக்கி சந்தித்து பேசினார் .அதை யாருமே புகைப்படமாக எடுக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு  உண்டு 

திருநாவுக்கரசு ,ஜெயலலிதா கேட்டும் தராத M.G.R இன் பிரச்சார வானை விஜயகாந்துக்கு கொடுத்து இருக்கிறார் ஜானகி M.G.R. அத்தோடு M.G.R,ஜானகி M.G.R என பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்து இருக்கிறார் ஜானகி .  

என்ன பதிவு பிடித்து இருக்கிறதா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே .   

Post Comment

41 comments:

jaisankar jaganathan said...

கப்டனா கேப்டனா?

kobiraj said...

கேப்டன் இந்திய ஆங்கிலம் .கப்டன் ஈழ ஆங்கிலம் அண்ணே .

நிரூபன் said...

கப்டன் பற்றிய கலக்கலான தகவல்களைத் தொகுத்திருக்கிறீங்க.

கப்டன் பற்றிய அறியாத தகவல்களை உங்களின் இப் பதிவின் மூலமாக இன்று அறிந்தேன்.

kobiraj said...

நன்றி நிருபன் அண்ணா

ananthu said...

பகிர்வுக்கு நன்றி...வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்காத ஹீரோ விஜயகாந்த்..அதிக அளவு புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவரும் இவரே...இவரைப் பற்றிய என் பதிவு

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?
http://pesalamblogalam.blogspot.com/2011/04/blog-post.html

kobiraj said...

நன்றி .உங்கள் பக்கம் வருகிறேன்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்காத ஹீரோ விஜயகாந்த். //
இது புது விஷயமா இருக்கு..

M.R said...

அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன் தங்கள் பதிவின் மூலம்

Jayadev Das said...

\\இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 17படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் 17 படங்களிலும் நடித்துள்ளார்.\\இவங்க ரெண்டு பெரும் பெரிய டைரக்டர்கள் தானே?!!

கும்மாச்சி said...

தகவல்களுக்கு நன்றி.

N.H.பிரசாத் said...

//எந்த ஒருவரின் உதவியும் இல்லாமல் தனிமரமாக நின்று கட்சி ஆரம்பித்து அதை வளர்த்து 7 வருடங்களுக்கு இடையில் தமிழ் நாட்டின் எதிர் கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்த்//

அன்றிலிருந்து இன்றுவரை காட்சி ஆரம்பிக்க யாரும், யாருக்கும் துணை நிற்கவில்லை.

//ஆண்கள் அநேகரின் தெரிவாக இருப்பது விஜயகாந்த் படங்கள் தான்//

அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் அனைவருக்கும் ரஜினியை தான் மிகவும் பிடிக்கும். ஒரு வேளை நீங்கள் பார்த்த இடத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் இருந்திருக்கலாம்.

//வாஞ்சிநாதன்,நரசிம்மா,ரமணா என தொடர் ஹிட்//

என்னது? வாஞ்சிநாதனும், நரசிம்மாவும் தொடர் ஹிட்டா? பலே வெள்ளையத்தேவா. என்ன ஒரு 'கலை தாகம்'?

//கருப்பு M.G.R//

இப்பவே கண்ணை கட்டுதே!

//தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 இல் மதுரை சூரன் முதல் ஜனவரி 4படம் வரை 18படங்களும் 1985ஆம் ஆண்டில் மட்டும் அலை ஓசையில் ஆரம்பித்து நானே ராஜா நானே மந்திரி வரை 17படங்களிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார் .இந்த சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது//

ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் 25 படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சாதனையைத் தான் இன்று வரை முறியடிக்க ஆளில்லை.

//(கவனிக்க 50வது படம் இல்லை)//

அதெப்படி கேப்டனோடு தலையை ஒப்பிட முடியும்? கேப்டன் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லையே?

//பாரதிராஜா தவிர்ந்து பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்தது இல்லை//

அவருக்கு நடிக்கத் தெரிந்தால் தானே பெரிய இயக்குனர்கள் அழைப்பார்கள்.

திரும்பவும் சொல்கிறேன். நடிகர்களை புகழ்ந்து பதிவெழுதுங்கள். தப்பில்லை. ஆனால் மற்ற நடிகர்களோடு ஒப்பிட்டு எழுதாதீர்கள். அந்த நடிகரின் ரசிகர்கள் கோபப்படுவார்கள்.

கடைசியாக ஒரு ரஜினி ரசிகன் சொன்னது,
'எங்க தலைவரு அப்பவே அரசியலுக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இப்ப பாரு, கண்ட கண்ட 'பன்றி' எல்லாம் சட்டசபையில எதிர்கட்சித் தலைவரா உக்காந்துகிட்டிருக்கு'.

நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

ரஜினி மிஸ் பண்ணூனார், கேப்டன் யூஸ் பண்ணிக்கிட்டார்

Anonymous said...

விஜயகாந்தின் பழைய காலத்து படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் அவர் அரசியலில் துணிந்தவர் சாணக்கியர் என்று எல்லாம் சொல்ல மாட்டேன்.. மக்களுக்கு வேறு தெரிவு இன்மை கூடவே தலையெழுத்து ..இப்போ விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக )))

Anonymous said...

//'எங்க தலைவரு அப்பவே அரசியலுக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.// பதவி நல்லா இருந்திருக்குமா இல்லை மக்கள் நல்லாய் இருந்திருப்பார்களா ????

மக்களுக்கு தொண்டு செய்வதென்றால் அரசியலுக்கு தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!

kobiraj said...

\\இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 17படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் 17 படங்களிலும் நடித்துள்ளார்.\\இவங்க ரெண்டு பெரும் பெரிய டைரக்டர்கள் தானே?!!
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை

kobiraj said...

N.H.பிரசாத்
நீங்கள் மட்டும் நினைத்து ஒன்றும் செய்ய முடியாது .எதிர்கட்சி தலைவராய் வருவது ஒன்றும் சுலபமான காரியம் இல்லை .அந்தளவு அரசியல் திறமை இருந்த படியால்தான் அவரால் முடிந்தது .

kobiraj said...

''ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் 25 படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சாதனையைத் தான் இன்று வரை முறியடிக்க ஆளில்லை''
நான் அதை சாதனை என கூறவில்லையே .தொடர்ந்து இரு வருடங்களில் 35 படம் நடித்ததைத்தான் சாதனை என கூறினேன் .

kobiraj said...

''திரும்பவும் சொல்கிறேன். நடிகர்களை புகழ்ந்து பதிவெழுதுங்கள். தப்பில்லை. ஆனால் மற்ற நடிகர்களோடு ஒப்பிட்டு எழுதாதீர்கள். அந்த நடிகரின் ரசிகர்கள் கோபப்படுவார்கள்.''
எந்த நடிகரோடு ஒப்பிட்டு எழுதினேன் .விளக்கமாக கூறவும்

kobiraj said...

''அதெப்படி கேப்டனோடு தலையை ஒப்பிட முடியும்? கேப்டன் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லையே?''
.நான் எங்கே யா தல யோடு ஒப்பிட்டேன் .
எனினும் உங்கள் கேள்வி எனக்கு பிடித்து இருக்கிறது .இதற்கான பதிலை யாரவது நடுநிலை வாதிகளிடம் எதிர் பார்க்கிறேன்

kobiraj said...

கடைசியாய் ஒன்று .சத்தியமாய் இது விஜயகாந்த் சம்பந்தப் பட்ட பதிவு .தலைப்பை பார்த்து விஜய் என்று நினைத்து விட்டீர்கள் போல கிடக்கு .அது முதல் பதிவு

kobiraj said...

சி.பி.செந்தில்குமார்
''ரஜினி மிஸ் பண்ணூனார், கேப்டன் யூஸ் பண்ணிக்கிட்டார்''
இதை நான் ஒத்துக் கொள்கிறேன்

kobiraj said...

கந்தசாமி.
''விஜயகாந்தின் பழைய காலத்து படங்கள் எனக்கு பிடிக்கும்''
எனக்கும் அவரின் சில படங்கள் பிடிக்கும் .நான் அவர் அரசியலில் உயர்ந்த விதம் பிடித்தது என்றுதான் சொல்லி இருந்தேன் .அவரின் அரசியல் பற்றி கூறும் அனுபவம் சத்தியமாய் எனக்கு இல்லை .
உங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்

kobiraj said...

''மக்களுக்கு தொண்டு செய்வதென்றால் அரசியலுக்கு தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!''
நிச்சயமாக உண்மை

kobiraj said...

!* வேடந்தாங்கல் - கருன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .நட்பு தொடர வாழ்த்துக்கள்

kobiraj said...

M.R
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kobiraj said...

கும்மாச்சி
உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன் .நன்றிகள் .

kobiraj said...

N.H.பிரசாத்
''அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் அனைவருக்கும் ரஜினியை தான் மிகவும் பிடிக்கும். ஒரு வேளை நீங்கள் பார்த்த இடத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் இருந்திருக்கலாம்.''
நாலு படங்களில் ஒன்று விஜயகாந்த் படம் என்றுதான் சொன்னேன் .ஏனையவற்றில் இரண்டு தலைவர் படம்தான் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை .அப்ப மற்றது யாரு படம் (சரி உங்களுக்கு BP ஏறனுமா .......தளபதி படம்தான் )

K.s.s.Rajh said...

@கேப்டன் பத்தி தெரிந்த தகவல்கள் தான் என்றாலும் உங்கள் பதிவில் படிக்கும் போது சுவாரஸ்யம்..யார் என்ன சொன்னாலும்.கேப்டன்...ஒரு சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வாழ்த்துக்கள்

மேரிஜோசப் said...

nandri

Real Santhanam Fanz said...

விஜயகாந்த் நல்லவரா கெட்டவரா? ஒன்னுமே புரியுதில்லையே!!!!

Anonymous said...

கப்டன் என்று தலைப்பை பாத்துடு நீ எதோ மிலிட்டரி கதை எழுதி இருக்கீர் என்று ஓடப்போறாங்க............விசயகாந்த இந்தியன் இங்கிலீசு உச்சரிபுலதான்யா சொல்லனும் கேப்டன் அப்பதான் ஒரு கிக்கு வருதுபாரு...

♔ம.தி.சுதா♔ said...

////செயின் ஸ்மோகர் ஆக இருந்த விஜயகாந்த் திருமணத்தின் பின் அந்த பழக்கத்தை அறவே விட்டு விட்டார்.அசைவப் பிரியரான அவர் இப்போது மீன் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார் ///

இதை பொய்யென்றுரைக்க வெளிக்கிட்டதால் தானே வடிவேலுக்கு ஒட்ட காற்று போனது...

விஜயகாந்தின் தனி மனித மயற்சி என்றும் பாராட்டுக்குரியது

kobiraj said...

Real Santhanam Fanz
அண்ணே உங்களுக்கே புரியலையா அப்ப நமக்கு

kobiraj said...

ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார்
''கப்டன் என்று தலைப்பை பாத்துடு நீ எதோ மிலிட்டரி கதை எழுதி இருக்கீர் என்று ஓடப்போறாங்க............விசயகாந்த இந்தியன் இங்கிலீசு உச்சரிபுலதான்யா சொல்லனும் கேப்டன் அப்பதான் ஒரு கிக்கு வருதுபாரு...''
ஆமா நீங்க சொல்லுவதிலும் ஒரு நியாயம் இருக்குத்தான்

kobiraj said...

♔ம.தி.சுதா♔
நீங்களாவது என் கருத்தோடு ஒத்து போகிறீர்களே .சந்தோசம்

WEWINSARAN said...

எங்க தலைவரு அப்பவே அரசியலுக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இப்ப பாரு, கண்ட கண்ட 'பன்றி' எல்லாம் சட்டசபையில எதிர்கட்சித் தலைவரா உக்காந்துகிட்டிருக்கு'.

WEWINSARAN said...

EN THALAIVAN SUPERSTAR VITTUKODUTHATHAL THAN EN THA PANTHA ELLAM. ATHAI MANATHIL VAITHU NADAKAVUM.

veedu said...

அவரு எதோ விஜயகாந்த் மேல இருக்கற பிரியத்துல எழுதி இருக்கின்றார் புடிச்சா பாராட்டுங்க பிடிக்கலையா சும்மா போங்க பன்றி அது இதுன்னு இது அவருக்கு வருத்தம்மா இருக்காதா..பாஸ்

kobiraj said...

''அவரு எதோ விஜயகாந்த் மேல இருக்கற பிரியத்துல எழுதி இருக்கின்றார் புடிச்சா பாராட்டுங்க பிடிக்கலையா சும்மா போங்க பன்றி அது இதுன்னு இது அவருக்கு வருத்தம்மா இருக்காதா..பாஸ்''
பிரியம் அல்ல ஏதோ ஒரு ஈர்ப்பு

sajirathan said...

முதல்ல விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்வதை நிறுத்துங்கள்...... கண்ட கண்ட ஆக்களைஎல்லாம் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட வேண்டாம்.

Kiruththikan Yogaraja said...

தலைவர் விஜயகாந்த் பற்றியதகவல் சூப்பர்.// மக்கள் இப்போது சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் //உண்மைதான் ஆகையாலதான் வடிவேலுவுக்கு அதிக கூட்டம் வந்தது ஆனால் அவரைவேடிக்கை பார்க்கத்தான் அவ்வளவு கூட்டமும் என்பது தேர்தல் முடிவில்தான் அவருக்கே தெரிந்தது கூட இருப்பவர்கள் உசுப்பேற்றிவிட்டால் சரியா? வடிவேலுவே இதற்கு நல்ல உதாரணம்.இதே போல் ஒரு மாபெரும் கூட்டம் இன்னொருவரது பேச்சைக்கேட்கவும் கூடலாம் முடிவு வடிவேலுவைப்போலவே இருக்கலாம்...அரசியல் வேறு சினிமாவேறு..விஜயகாந்தை மட்டுமல்ல ரஜனி போன்று யாரும்கூட தான் எம்.ஜி.ஆர் என்று கூறமுடியாது

Related Posts Plugin for WordPress, Blogger...