Sunday, November 27, 2011

மயக்கம் என்ன -மயக்கியதா

மயக்கம் என்ன 
மயக்கம் என்ன வெளிவந்து  ஓடிக் கொண்டு இருக்கிறது படத்தை பற்றி வெவ்வேறு  விதமாக   கருத்துகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன  சில பதிவர்களின் பார்வையில்  மயக்கம் என்ன 
மயக்கம் என்ன - திரை விமர்சனம் -செங்கோவி 

எனினும் behindwoods  மயக்கம் என்ன படத்துக்கு 3.5/5 கொடுத்து இருக்கிறார்கள் .வேலாயுதம்,ஏழாம் அறிவு க்கு 3/5 தான் கொடுத்து இருந்தமை குறிப்பிடத் தக்கது . Behindwoods மயக்கம் என்ன review.
என்னுடைய நண்பன் கொழும்பில்   படம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்பிய   செய்தி 

"மயக்கம்  என்ன " ஒரு  கலைஞனின்  பயணம் . சாதிக்க  வேணும்னு   ஆசைபடுறவங்க  பார்க்க வேண்டிய   படம் .  பார்க்க வேண்டிய   படம் .பார்க்க வேண்டிய   படம் .

மயக்கம் என்ன -ஒருவன் நல்லா இருக்கு எண்டுறான் .இன்னொருத்தன் மொக்கை எண்டுறான் # இதுக்குத்தான் சொல்லுறது படம் பார்க்குறது எண்டு முடிவு எடுத்தால் first show பார்க்கணும் எண்டு
கண்டியில் (aerena) இப்போதும்  வேலாயுதம்,ஏழாம் அறிவு  ஓடிக் கொண்டு இருப்பதாலும்   கொழும்பு   செல்ல நேரம் இன்மையாலும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன் 
************************************************************************************************************
பிரபலங்களின் குடும்ப படங்கள் சில  
 
ரஜினி   பற்றி படித்த வியப்பான தகவல்கள் சில உங்களுக்கு பகிர்கிறேன்
'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach''

ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

இன்னும் ரஜினி பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலும் .......

நான் இந்த தகவல்களை ஒரு தளத்தில்தான் பெற்றேன் எனினும் இதன் மூலம்   எது என்று தெரிய வில்லை ஆதலால் அந்த தளத்தின் லிங்க் கொடுக்க முடியவில்லை 


***********************************************************************************
நண்பன் official trailor 
இதை பார்க்கும் போது  3-idiots எந்த வித மாற்றமும் இல்லாமல்  re make செய்யப் பட்டுள்ளது ,காவலனில் தேவை இல்லாமல்  புகுத்தப் பட்ட விஜயிசம் இதிலே தவிர்க்கப் பட்டு  இருக்கும் என்ற எதிர்பார்ப்பே உருவாகிறது . நான் எதிர் பார்த்ததும் இதைத்தான்.
என் ப்ரெண்ட போல யாரு மச்சான் ..!
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான் ..!
நீ எங்க போல எங்க மச்சான் ..!
என என்னி என்னி ஏங்க வச்சான் ..!
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான் ..!
நம் கண்ணில் நீர பொங்க வச்சான் ..! ♥ ♥
**********************************************************************************
 உலகிலேயே அழகிய பல்கலை கழகங்களில் ஒன்றான கண்டியில் அமைந்திருக்கும் பேராதனை பல்கலை கழகத்தின்   அழகை ரசிக்க விருப்பமா   இங்கே  க்ளிக் செய்யுங்கள் 
beauty of pera
****************************************************************************
 தொடர் பதிவாக எழுத ஆரம்பித்த விஜய் ,சூர்யா வென்றது யார் ? .தொடர்ச்சி விரைவில் வெளிவரும்  என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்   

Post Comment

6 comments:

சுதா SJ said...

பல்சுவை நிறைந்த (தொகுப்பு) பதிவு பாஸ்...

மயக்கம் என்ன... நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் படம்.

ரஜனி பற்றிய துணுக்குகள் பிரமாதம். ரெம்ப ரசித்தேன்.

ரைட்டர் நட்சத்திரா said...

பதிவு பல்சுவை விருந்து

ரைட்டர் நட்சத்திரா said...

பதிவு பல்சுவை விருந்து

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

சுவையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

பிரபலங்களின் படப் பகிர்விற்கும் நன்றி!

Anonymous said...

நல்லாயிருக்கு...

பல்சுவை விருந்து ரசித்தேன்...

Anonymous said...

http://newyarl.com/fullview.php?id=NjQzMg==

Related Posts Plugin for WordPress, Blogger...