Saturday, July 2, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?

தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது 
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.

மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில்  எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.மஹா பாரத     கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே  என்ற அருமையான  காதல்  கதையையும்  வெற்றிகரமாக  கொடுத்தவர்  .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர்  .அதிலும் ரோஜாவுக்கு  முதல்  வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்


என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய்  எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக    தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.  

இந்த பதிவில் மணிரத்னத்தை பற்றி மட்டும் சொல்லியதால் சிறந்த இயக்குனர் மணி சார்தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருப்பதால் அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வர முடியவில்லை .எனவே அடுத்தடுத்த பதிவுகளில்    ஏனைய இயக்குனர்பற்றி எழுதுகிறேன் .
who is the best director of tamil cinema என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள் 

  முக்கிய குறிப்பு   
நான் பொழுதுபோக்கிற்காக மட்டும் எழுதும் சாதாரண சினிமா ரசிகன் .எனது பதிவில் பிழைகள் இருக்கலாம். தயவு செய்து குறைகளை ஏற்று பிழைகளை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .
..

Post Comment

8 comments:

மனசாலி said...

No 1 Copy and Paste Director is Manirathnam

kobiraj said...

you think who is the best tamil director manasaali?

மனசாலி said...

bala. now i sugget thiagarajan kumararaja.

kobiraj said...

bala ok. but not sure. பாலாவின் சிஷ்யர்களே கலக்குகிறார்களே.

மனசாலி said...

what u think about thiagarajan kumararaja?

மாய உலகம் said...

மற்ற நாட்டினரையும் தமிழ் சினிமா பக்கம் ஈர்க்கப்பட வைத்த பெரும் பங்கு...மணிரத்னம் சாரையும் சேரும்

மாய உலகம் said...

நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை...
super

kobiraj said...

நன்றி மாய உலகம் sir.

Related Posts Plugin for WordPress, Blogger...