Tuesday, July 12, 2011

விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும்

கடந்த தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் தோல்விகளால்  துவண்டு கொண்டிருந்த விஜய் நடுப்பகுதியில் தமிழ்  சினிமாவின்  உயர்  நிலையை தொட்டார். திருமலை மிகவும் திருப்புமுனையாக இருந்தது.மாஸ் ஹீரோவாக விஜயை இனங்காட்டியது திருமலை.


தொடர்ந்து கில்லி,மதுர ,திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தார்.வருடத்துக்கு  மூன்று படம் கொடுத்தார்.ரசிகர்களை அள்ளி குவித்தார்.இடையிடையே வந்த சில தோல்வி படங்களும்  இந்த மாபெரும் வெற்றிகளின் முன்னால் காணாமல் போயின .  ஏனைய நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு  உருமாற்றி சிரமம் எடுத்து நடிக்க இவரோ இலகுவாக உச்சத்தை தொட்டார் .சூர்யா மிகவும் கடினப்பட்டு முதுகை கூனி நடித்த பேரழகன் கில்லிக்கு முன்னாள் நிற்க முடியவில்லை. விக்ரம் தேசிய விருதை வாங்கிய பிதாமகன் கூட திருமலையை நெருங்க வில்லை.ஆரம்ப காலத்திலிருந்தே போட்டியாளராக இருந்த அஜித்தை மிகவும் பின் தள்ளினார்.மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் தலைவர் ரஜினுக்கு அடுத்த இடத்தை தொட்டார்.இவ்வாறான விஜயின் வளர்ச்சியை  பலரும் மூக்கின் மேல் விரலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.






விஜயின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது அழகிய தமிழ் மகன்.படம் ஓரளவு நல்லாய் இருந்தும் விஜயை வில்லனாக பார்க்க விரும்பாத அவரின் ரசிகர்களே தோல்வியடைய வைத்தனர்.தொடர்ந்து குருவி.விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே (இன்னும் வேலாயுதம் வர வில்லை .என்ன முறைப்பு.சரி நண்பன்வரவில்லை )எனக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த கில்லி பட கூட்டணியுடன் வந்த குருவி தியேட்டரை விட்டு பறக்க விஜயே முக்கிய காரணமானார்.சூப்பர் ஸ்டார் கூட செய்ய பயப்படும் சாகசங்களை குருவியில் நிகழ்த்தினார்.பறந்து பறந்து சாகசம் செய்ததால்தான் பெயரை குருவி என்று வைத்தனரோ திரும்பவும் சொல்லுறன் குருவி 150வது  நாள் கொண்டாடியது .(மச்சி நீ கேளேன் )..குருவியுடன் விஜயை கேவலப்படுத்தும் கைங்கரியங்கள் இணையத்தில் ஆரம்பமாகின.அடுத்த வில்லும் நொந்து போனது.


அரசியலுக்கு  வர ஆசைப்படும் விஜய் அரசியலிலேயே ஒரு கூட்டணி நிலைக்காத போது படங்களில் எப்படி நிலைக்கும் என்று நம்பினாரோ .அடுத்த வேட்டைக்காரன் மிகுந்த  எதிர்பார்ப்புடன் வெளியாகியது.அந்த காலத்தில் காதலில் விழுந்தேனை கூட வசூலில் எழ வைத்த சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டமையே எதிர் பார்ப்புக்கு காரணம்.எதிபார்ப்பு வீண் போகவில்லை .படம் விஜய் ரசிகர்களை முழுதும் திருப்தி படுத்தியது. பாடல்கள் படி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின .புலி உறுமுவதை  பார்த்த போது சிங்கம் ஒன்று புறப்பட்டு வந்தமாதிரியே  இருந்தது.அயன் வசூலை முறியடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் கூட அறிவித்த பின்னரும் ,2009ம் ஆண்டின் favourite hero ஆக vijay அவார்ட்ஸ் கிடைத்த பின்னும் படம் தோல்வி என்று சொல்பவர்களுடன் வாதிட முடியாது.


விஜயின் 50வது படம் சுறா மலையாள படம் ஒன்றின் ரீமேக் என்றார்கள் .அதுவும் மோகன்லால் நடித்த படம். என்னடா எப்படி மோகன்லால் படத்தில் தளபதி எங்கேயோ உதைக்குதே என்று நினைத்த போது படம் மீண்டும் சன் வெளியீட்டில் படுதோல்வியை சந்தித்தது. தளபதியின் உயிர் ரசிகனான நானே தளபதி மீது கோபபட்டது இந்த படத்துக்குத்தான் .மற்றைய படங்களை நண்பர்களுடன் பார்த்து விட்டு படம் முடிவில் நண்பர்களின்  எல்லா கேள்வி கணைகளையும் தனி ஆளாய் சமாளித்த என்னால் சுறா முடிவில் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விட்டது.சுறாவுடன் பிரச்சினைகள் உச்சமடைந்தன. சன் பிக்சர்ஸ் உடன் மோத தயாரானார். அரசியல் கட்சி ஆரம்பிக்க எத்தனித்ததால் தி.மு.க.வின் எதிர்ப்பை சம்பாத்தித்தார்.சுறா விஜயை மிகவும் யோசிக்க செய்து விட்டது. வலையுலகில் விஜயை பின்னி பெடல் எடுக்காதவர்கள்   இல்லை  என்று சொல்லலாம் .விஜயை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட விஜயை கிழித்து எழுதினால் தான் தங்கள் பதிவையும் வாசிப்பார்கள் என கருதி எந்தளவு முடியுமோ அந்தளவு வதைத்தார்கள்.


வழமையாக தோல்விகளை பற்றி கண்டுக்காமல் அடுத்த பட வேலைகளை பார்ப்பவர் விஜய். அவர் நிதானித்து நின்ற இடம்தான் .சுறா .மற்ற நடிகர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்தார்.தான் நடித்த படங்களின் இயக்குனர்களை நினைத்தார். ATM பரதன்,வில்லு பிரபுதேவா, சுறா ராஜ்குமார் வேட்டைக்காரன் பாபுசிவன் இப்போதுதான் விஷயம் விளங்கியது தளபதிக்கு .நண்பன் சூர்யா டாப் கியரில் போவதற்கு அவர் இயக்குனர் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தார்(முன்னரே யோசித்தால் சுறா வந்திருக்குமா ).  அதை உணர முன்னர சித்திக்குடன் காவலனில் இணைந்தமை வேறு விடயம்.தனது பிடியை தளர்த்தினார் சித்திக்கின் எண்ணப்படி படம் எடுக்க அனுமதித்தார்.காவலன் மீண்டும் தளபதியை திரும்ப வைத்தது. திரையுலகில் எந்த ஒருவருமே சந்திக்காத கடும் நெருக்கடியின் மத்தியில் காவலன் வெளி வந்து வெற்றி பெற்றது. விஜய் ரசிகன் என என்னை பெருமைப்பட வைத்தது


.இனி சரவெடி 
.கடந்த  தசாப்தத்தின் இறுதியில் வீழ்ச்சியை  சந்தித்த விஜய் தற்போது   டோப்கியர்  இல்ல புல்லட் வேகத்தில் பயணிக்கிறார் . இப்போது மிக அருமையாக நிதானமாக யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.ஜெயம்  ராஜாவின் வேலாயுதம்     கில்லி போல் சொல்லி அடிக்கும்  வகையில் விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே பிரமாண்டமாய்  தயாரிக்கப்படுகிறது.அடுத்து நண்பன் சொல்லவே வேண்டாம் பிரமாண்டத்துடன் முதல் தடவையாக இணைகிறார்.இசையுலகில் முன்னணியில் திகழும்  ஹரிஸ் ஜெயராஜ் உடனும் முதற்தடவையாக   இணைகிறார் .படம் வெற்றி உறுதியாகியநிலையில்அடுத்த இன்ப அதிர்ச்சி a.r .முருகதாஸ் இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் 65 கோடி செலவில் நடிக்க உள்ளார்.அக்கினி புயலுடனும் பகலவனாய் பொங்க உள்ளார்.ஆக மொத்தத்தில் மீண்டும் உச்சத்தை தொட உள்ளார் எங்கள் இளைய தளபதி.
  முக்கிய குறிப்பு - நடு பந்திகள் விஜயை  பிடிக்காத   என்  நண்பர்களும்   பார்க்க   வேண்டும்   என்பதற்காக மட்டுமே  

Post Comment

18 comments:

Thusa said...

unnudaja mujatsi vetripera enathu valththukkal.
santhosamajirukku.i feel better.
anal sura mokanlalin remakeenthai.anal athil mokanlal nadikkavillai.nan antha paddu paththanan.ethukkum search panni par

kobiraj said...

thanks for ur comment.நண்பா நன்றிகள்.

கவி அழகன் said...

அப்படி போடு அரிவாளை சுப்பர் மச்சி

kobiraj said...

thankyou for your comment& FOLLOWING ME கவி அழகன்

kobiraj said...

பதிவு போட்டு ஒரு நாள் கழியாத நிலையில் 500 hits தாண்டியுள்ளது.இதை பார்த்து உற்சாகம் அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்

MOHAN said...

THALAPATHY DA . THALAPATHYA YETHUTHAVAN YELAM ATHI GETHI DA INTHA SURIYA YEMATHARA SUMA UUTHE THALERUVARU NAMMA "ILLAYATHALAPATHY"

kobiraj said...

that's true mohan.வேலாயுதம் வெற்றி ஆயுதம்

Anonymous said...

கோபிராஜ்..ரொம்பதான் விஜய் மேல பக்தி போல...அவர் போல உங்கள் பதிவுலக வாழ்வு வளர வாழ்த்துக்கள்..
முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...

kobiraj said...

.என்னவோ தெரியவில்லை.ஏதோ ஒரு ஈர்ப்பு. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.கண்டிப்பாக வருகிறேன்.

Unknown said...

பாஸ் பிச்சிட்டீங்க பாஸ்!...சூப்பர்.பதிவுலகில் விஜய் ஆதரவு(வெளிப்படை ஆதரவு)பதிவர்கள் குறைவு..உங்கள் வரவு எங்களுக்கு பலமாகட்டும்!

kobiraj said...

நன்றிகள் மைந்தன் சிவா.அடுத்து வரும் பதிவுகள் ''பதிவுலகில் விஜய் ஆதரவு(வெளிப்படை ஆதரவு)பதிவர்கள் குறைவு''.அடிப்படையாக கொண்டதுதான்.விரைவில்...

கார்த்தி said...

நல்லா இருந்தது உங்கள் பதிவு! ஆனால் நீங்கள் சொன்ன படங்களில் மதுர வெற்றிப்படமில்லையே?
இப்போது விஜயின் கையில் நல்ல இயக்குனர்களின் படங்கள்தான். பாப்பம் விஜய் மீண்டும் உச்சத்தை தொடுகிறாரா என!

kobiraj said...

நன்றி கார்த்தி மதுர வெற்றி இல்லைதான் ஆனால் தோல்வியும் இல்லை.கில்லி,திருப்பாச்சி எனும் இரண்டு மெகா ஹிட்டுகளுக்கு இடையில் வந்ததால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.மதுர வரும்போது கூட கில்லியிலிருந்து மக்கள் மீள வில்லை.

sashaank said...

kavalan also was a hit na......

Anonymous said...

superb................

alav said...

eppavume evanukkum vetriyum, tholviyum nirantharam illai..enga thalapathy ini thara povathu ellame vetri mattuume than.

kanavugalkalam said...

நான் அஜித் ரசிகன் இருந்தாலும் விஜயின் படங்கள் வெற்றிபெற எனது மற்றும் அஜித் ரசிகர்களின் வாழ்துக்கள்.....

kobiraj said...

kanavugalkalam
எல்லோரும் உங்களை போல இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.பாராட்டுக்கள் .

Related Posts Plugin for WordPress, Blogger...