முடிவை பார்க்க முன் ஒரு நிமிடம்
எனது வலைப்பயணத்தின் ஆரம்பத்தில் என்ன எழுவது என்று தெரியாமல் (இப்பவும் தெரியாதுதான் ) எனது தளத்தில் பகிர்ந்து கொண்ட எனக்கு மிகவும் பிடித்த அதிக likesஐ பெற்று தந்த statusகளை இங்கே பகிர்ந்தேன் .எனினும் அது பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மீண்டும் திருத்தி புதிய பதிவாக பகிர்கிறேன் .இதில் சில மட்டுமே என்னால் சுயமாக எழுதப் பட்டவை .மற்றவை எங்கிருந்து பெறப்பட்டன என்று எனக்கே தெரியாது. ஏனெனில் அவை எனது நண்பர்களில் இருந்து பெற்றது .அவர்களும் எங்கேயோ இருந்துதான் பெற்று இருப்பார்கள் .இதை பகிர்வதன் நோக்கம் இதில் பிடித்தவற்றை நீங்களும் உங்கள் சமூக தளங்களில் பகிர வேண்டும் என்பதற்காகவே .
பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள்
உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!
அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று..
வீட்டின் பெயரோ அன்னை இல்லம் ஆனால்
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்...#என்ன வாழ்க்கடா இது #
வெறுமையாய் உணரும் தருணங்களை விட வெட்டியாய் உளறும் தருணமே மேல்
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி
கவலைபடாதே!
நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால்
இருக்கிறாய் என்று பெருமைபடு!
கவலைபடாதே!
நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால்
இருக்கிறாய் என்று பெருமைபடு!
மிக சிறிய கவிதை ஒன்று கேட்டார்கள் நான் அம்மா என்றேன், கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சிறியதாக சொல்லி இருப்பேன் நீ என்று
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும் ஓரே மட்டமாய் இருக்கும் -
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும் ஓரே மட்டமாய் இருக்கும் -
பெண்ணின் தவறுகளை நேர்மையாக விமர்சிக்கும் ஆணையும், பெண்ணின் திறமைகளை நேர்மையாக பாராட்டும் பெண்ணையும் காண்பது அரிது#அனுபவம் இல்லை
நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ..
எனது தொடர் பதிவான தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?. என்பதை நான்கு பதிவுகளில் இட்டிருந்தேன். அதே காலப் பகுதியில் ஒரு வாக்களிப்பு நிரலையும் இணைத்து இருந்தேன்.அதிலே பலரும் ஆர்வத்தோடு வாக்களித்து இருந்தீர்கள் .அங்கே வாக்களிப்பதற்கான கால எல்லை முடிவடைந்து விட்டது. எனவே அதன் முடிவுகளை உங்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லைதான் எனினும் சொல்கிறேனே .
மணிரத்தினம் - 37 (20%)
ஷங்கர் - 65 (35%)
பாலா - 49 (26%)
முருகதாஸ்- 24 (13%)
கௌதம்வாசுதேவ் மேனன் - 7 (3%)
மொத்த வாக்குகள் -182
சரி முடிவுகளை அறிவித்து விட்டேன். சரி சிறிய வியாக்கியானம் அலுப்பு இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.பதிவுலகுக்கு அறிமுகமாகி சில நாட்களுக்குள் ஆரம்பித்த முயற்சிதான் இது .வெறும் 182 பேரின் வாக்குளை மட்டும் கொண்டு முடிவு எடுக்க முடியாது என்பது பாமரனிலிருந்து படித்தவன் வரை தெரியும். எண்டை பதிவுகளையெல்லாம் எவனையா மினக்கெட்டு இருந்து பார்க்கப் போகிறான் என்று எழுதும் என்னை பொறுத்த வரை இந்த வாக்குகளில் ஒவ்வொரு வாக்கும் இலட்சம் வாக்குகளுக்கு சமம்.சரி இந்த வாக்களிப்பு நிரலை என்னுடைய வலை தளத்துக்கு வந்தவர்களில் 6000பேராவது பார்த்திருப்பார்கள்.அவர்களுக்காகத்தான்
சரி தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெரிவாகி இருக்கிறார்.அதற்கான சகல தகுதிகளும் உண்டு .அப்புறம் இங்கே வாக்களிப்பவர்களின் மனநிலை அனேகமாக இயக்குனர்களின் இப்போதைய நிலையையே பிரதி பலிக்கும் .அந்த வகையில் எந்திரன் இமாலய வெற்றி ஷங்கருக்கு மிகப் பெரிய சாதகம் .மணிரத்னத்தின் பின்னடைவுக்கு ராவணன் பாதிப்பு காரணமாக இருக்கலாம் .பாலாவின் நிலையை என்னால் சொல்ல முடிய வில்லை .அவன் இவனை வலைத் தளங்கள் கடிந்து கொண்டாலும் வசூலில் சோடை போக வில்லை.மக்கள் மனதில் நல்ல பெயரை வாங்கி உள்ளது.என்னை பொறுத்தவரை பாலா நான் எதிர் பார்த்ததிலும் முன்னணியில் உள்ளார்.முருகதாஸ் முன்னேற இடமுண்டு.நான் எதிர்பாராத முடிவு கௌதமுக்குத்தான் மிகக் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் .இவரை விடுத்து வேறு இயக்குனரை சேர்த்து இருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் படி இருக்கிறது .நான் நினைக்கிறேன் நடுநிசி நாய்கள் வந்திருக்க விட்டால் இவர் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் .இவர்களை விட செல்வராகான் அமீர், KV.ஆனந்த் ,விஜய் ,சசிகுமார் ,மிஸ்கின் , K.S . ரவிக்குமார் போன்றவர்களை இணைத்திருந்தால் அதிக வாக்குகளை பெற்றிருப்பார்களோ தெரிய வில்லை. .நான் தெரிவு செய்த இந்த ஐந்து பேரும் BEHINDWOODS சிறந்த இயக்குனர் இருபது பேரில் முதல் ஐந்து பேரும்தான்.எனினும் இங்கு முடிவுகள் வேறு விதமாக உள்ளன ..ஏனெனில் நான் கேட்டது தற்போதைய சிறந்த இயக்குனர் என்பதாய் இருக்கலாம் .
தளபதி ரசிகனின் பார்வையில் முடிவுகள்
ஷங்கர் -தளபதியின் அடுத்த படத்தை எடுப்பது யாரு அவர்தான் சிறந்த இயக்குனரு .
மணிரத்னம்- பொன்னியின் செல்வனை எடுத்திருந்தால் முதலாவதாய் வந்திருக்கலாமே .வட போச்சே
முருகதாஸ் -கஜினி கதையை ஏன் முதலில் அஜித்திடம் கூறினார் .அவருக்கு நம்ம மவுசு தெரியாதா சரி சரி மனுஷன் இப்பதான் உணர்ந்து இருக்குறார். இனி உன்னோட ராசி நல்ல ராசி .
கௌதம் -MISSION ஐ ஆரம்பிக்க முன்னமே முடிவை சொன்னா எப்பிடி.
பாலா-அடடா யாருப்பா பாலா தமிழ் சினிமா எடுக்கிறானா நான் கேள்விப் படவே இல்லையே .
10 comments:
எனக்கு பிடித்த இயக்குனரும் சங்கர்தான்!
ஹிஹி இறுதி பன்ச் சூப்பர் தல!
உங்கா ஓட்டை யாருக்கு போட்டிங்க...........
சங்கர் தமிழ் சினிமாவையே புரட்டி எடுத்தவர் ஆயிற்றே கார்த்தி அண்ணா.நன்றிகள் சிவா
@kanavugalkalam நானும் தளபதி ரசிகன்தான் கடைசி பந்தியை படிங்க பதில் புரியும்
ஸ்டேட்டஸ்...நட்பின் பெருமையினையும் சொல்லி நிற்கிறது, எனக்கும் சங்கரை ரொம்பப் பிடிக்கும் சகோ.
நிருபன் அண்ணா கருத்துக்கு நன்றிகள் பேராதனையில் படித்தவருக்கு நட்பை பற்றி தெரியாமல் விட வாய்ப்பில்லை தானே
உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
உண்மையான வார்த்தைகள் .
வார்த்தைகள் கூட இல்லை ,உண்மையான விஷயம் .
உண்மையான வார்த்தைகள் .
கருத்துக்கு நன்றிகள் மாலதி,M.R
Post a Comment