டிக்கெட் விலை சடுதியாக உயர்வு (பால்கனி -300௦௦,பின்வரிசை-200,பாக்ஸ்-350,4புது படம் ஒரு dvd யில்-60 ),இன்று திங்கட்கிழமை போன்றன காரணமாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் .படம் ஆரம்பித்தது.1000 பேரைக் கொள்ள கூடிய தியேட்டரில் நுற்றுக்கும் குறைவானவர்களே இருந்தனர்.எந்தவொரு சத்தமும் இல்லை .ஏதோ நான் தனியே மட்டும் இருந்து பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது
டாக்டர் சியான் விக்ரம் நடிக்கும்(இதுக்கு கூட ஒரு சத்தமும் இல்லை) தெய்வ திருமகள் என்று தொடங்கியது படம். படம் தொடங்கி முடிவதற்கு இடையில் எனக்கும் என் கண்களுக்கும் இடையில் ஒரு மிகப் பெரும் போராட்டமே நடைபெற்றது .இதுநிஜம் இல்லை சும்மா படம்தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டாலும் கடைசி நிமிடங்களில் நான் தோற்று விட்டேன் .(தனது 50 வது படத்தை தளபதி எப்படியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு போனேன் இப்படி சொதப்பி விட்டாரே என்று கவலையின் உச்சத்தில் இருந்த போது கூட கண்ணீர் வரவில்லை )படம் நான் எதிர் பார்த்த அளவை விட சிறப்பாக இருந்தது.
விக்ரம் நடிப்பில் பின்னி எடுத்து விட்டார் .என்னதான் காபி படம் என்றாலும் தேசிய விருதுக்கு நிச்சயம் தகுதி உண்டு .(இப்பதான் தேசிய விருது எந்த படத்துக்கு கொடுப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே) .விக்ரமுக்கு கிடைக்குதோ இல்லையோ நம்ம நிலாக் குட்டிக்கு(சாரா )கண்டிப்பா கிடைக்கணும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் .என்ன நடிப்புடா .இந்த மழலையிடம் இப்படி ஒரு திறமையா .படத்திலேயே என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்தது இந்த நிலாவாய் தான் இருக்க முடியும் .பிறந்தது முதல் தந்தையை கேட்கும் இடக்கு முடக்கான கேள்விகள் அருமை .ஒரே ஒரு ஊரிலே பாடலில் இடையிடையே கேட்கும் கேள்விகள் டைனோசரை வேட்டையாட சென்ற ராஜா புலியை வேட்டையாடியதும் விக்ரமை கலாய்ப்பது அருமை.
நிலா -அம்மா எங்கப்பா
கிருஷ்ணா -சாமிகிட்ட போய் இருக்கா
நிலா -ஏன் அப்பா சாமிக்கு அம்மா இல்லையா
கிருஷ்ணா-இல்ல சாமி நல்லவங்கள தன் கூடவே வைச்சிருப்பாரு
நிலா-அப்ப நாங்க கெட்டவங்களா
மிகவும் பிடித்த வரிகள் இவை .
விக்ரமின் திறமை ஏலவே நாம் அறிந்ததே .சற்றும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் .குழந்தை பிறந்த சந்தோசத்தில் மிதக்கும் போது மனைவி இறந்த செய்தியை கேட்டவுடன் அவரது முக பாவனை நடிப்பின் உச்சம்.இறுதியில் பேசும் சைகை மொழியும் அருமை.அனுஷ்கா அமலாபால் சந்தானம் நாசர் ஒருவரும் குறை சொல்வத்கு இல்லை.அனுஷ்கா அருந்ததிக்கு பின்னர் இதில்தான் நடித்திருக்கிறார்.அதுவும் இடைவேளைக்கு பினர் சூப்பர் .அமலாபால் சொல்வதற்கு ஒன்றுமில்லை .இந்த படத்தில் சந்தானத்திடம் எதிர் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை .எனினும் தன்னால் முடிந்ததை செய்துள்ளார். கிருஷ்ணாவின் முதலாளி விக்டரும் என்னை கவர்ந்தார். என்னவோ தெரியவில்லை பாஸ்கரை எனக்கு பிடிக்கவில்லை சந்தானம் ''கோட்டுக்கு கேசு வரும்னு பார்த்தா லூசு வந்திருக்கு ''என்று சொல்லும் காட்சியில் எனக்கு கடும் கோபம்தான் வந்தது .''ஒரு இடத்தில ஒரு சம்பவம் நடக்கிறதுக்கு சம்பந்தப்பட்ட இருவரில ஒருத்தருக்கு விஷயம் தெரிந்தா பத்தாதா '' இந்த இடத்தில் மட்டும்தான் அரங்கிலிருந்த மௌனம் கலைந்து கலகலப்பு ஏற்பட்டது. 5 வயது மனநிலையுள்ள ஒருவருக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காக இந்த வசனம் சேர்க்கப் பட்டிருந்தாலும் விக்ரமையும் பாஸ்கரின் மனைவியையும் தொடர்பு படுத்தி இந்த வசனம் பேசப்பட்டது எனக்கு பிடிக்க வில்லை .சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவின் மனைவிலூட்டிகள் தான் நினைவுக்கு வந்தது.
இயக்குனர் விஜய் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள் சார் (I AM SAM ஐ சொல்லவில்லை.).மிக அற்புதம் .படம் பார்க்க செல்லும் போது நித்திரை ,கொட்டாவி பிரச்சினைகளை எண்ணியபடிதான் சென்றேன் .நீங்கள் அதற்கு வேலை வைக்க வில்லை அனுஷ்காவுடன் விக்ரமின் பாடல் மட்டுமே சிறிய சலிப்பை தந்தது .நல்ல மனநிலை படைத்த மனிதர்கள் பார்த்துக் கொண்டு போக மன வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா தண்ணீர் பைபை பூட்டுவதும் வீதி ஒழுங்கை பேணுவதும் மக்களுக்கு ஒரு சாட்டைஅடி .பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் .'ஒரே ஒரு ஊரிலே ' கவர்ந்தது.பின்னணி இசை பாராட்டக் கூடியது . நீரவ் ஷா ஒளிப்பதிவு சொல்வதற்கு ஒன்றும் இல்லை (சொல்லவும் தெரியாது ).
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் . தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தில் வித்தியாசமான படங்கள் வந்த வண்ணமுள்ளன.நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் தான் அவற்றின் வெற்றி தங்கியுள்ளது .தெய்வதிருமகளின் யாழ் நிலைமையை முதல் பந்தியில் சொல்லியுள்ளேன் .தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்து இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்கமளியுங்கள் .
அப்புறம் இது என்னுடைய முதல் விமர்சனம் இது (படுபாவி விமர்சனமா இது ) தயவு செய்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் . விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும் க்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றிகள்
17 comments:
கலக்கல் விமர்சனம் தல!!!வாழ்த்துக்கள்...
இன்னும் படம் பாக்கல,ஆனா, இந்த விமர்சனத்தைப் பார்த்து பார்க்கணும் போல இருக்கு. 'ஒரே ஒரு ஊரிலே' எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. உங்க விமர்சனம் நல்லாருக்கு.
மைந்தன் சிவா நன்றிகள்,ரிப்னாஸ்நன்றிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
அடடா தமிழ் இன்லியில் பிரபலமாக்கி விட்டீர்களே நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரபலமாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்
தமிழ்வெளியிலும் சூடான பதிவுகளில்# அம்புட்டு நல்லா இருக்கா
கலக்கல் விமர்சனம் வாழ்த்துக்கள
//படத்திலேயே என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்தது இந்த நிலாவாய் தான் இருக்க முடியும்//
உண்மை!
கவி அழகன் ,ஜீ கருத்துகளுக்கு நன்றிகள்
கலக்கல் விமர்சனம் வாழ்த்துக்கள கோபி...திருட்டு VCD ல தான் இதுக்கு முன்னே படம் பார்த்தீங்களோ..? -:)
சிந்து சமவெளியும் மறுபடியம் இபொழுது அரங்கிற்கு வந்துள்ளது என்று கேள்வி. அப்படியே I am Sam என்ற படத்தையும் மறுபடியம் திரைடலாம்.
தெய்வ திருமகள் படத்தை பார்த்து விட்டு இந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் கதை நன்றாகப் புரியும்!!! நல்ல ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி இருக்கும்!!!
அன்புடன்
சிவா
ஒரு dvd யில் நாலு படம்னா எப்பிடி இருக்கும் அதை பார்க்கிற நேரம் பார்க்காம தமிழ் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையா பார்க்கலாம்.reverie.சிவா கருத்துக்கு நன்றி.
முதல் விமர்சனமே இப்படின்னா..
கலக்குறிங்க போங்க...
நமக்கு இப்படி எல்லாம் எழுத் அவர மாட்டேங்குது
நானும் தான் எழுதி இருக்கேன்..
http://www.tamiltel.in/2011/07/blog-post_3769.html
ரொம்ப நன்றி மனோவி .
முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்.............
மிக்க நன்றி
Post a Comment